ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 9 முதல் 10 ஆம் வகுப்பு முடிய தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமை ஆசியர்களுக்கு பார்வை 2 ல் காணும் அரசு கடிதத்தின்படி இரண்டு பிரிவிலும் வெகுமதி தொகை அளிக்கப்பட்டு வருகிறது . பார்வை 3 - ல் காணும் ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகளின்படி இத்திட்டத்தினை 2020-2021 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் பொருட்டு தற்போது புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியாக வெகுமதி தொகை பெற தகுதியுள்ள தலைமை ஆசிரியர்களின் சார்ந்த விவரங்களை Excell Format- ல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கல்வி மாவட்டம் வாரியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக ' இ ' பிரிவு மின்னஞ்சல் esec.tndse @ gmail.com மூலம் அனுப்பி விட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை 19.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர்
மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச்
செய்யும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி
மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...