Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட முழு நேர தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்த கோரிக்கை!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  திட்ட முழு நேர தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்த CM Helpline 1100ல் கோரிக்கை
IMG-20210223-WA0012
மாண்புமிகு. புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மிகச் சிறப்பான பொற்கால ஆட்சியை தமிழக மக்களுக்கு அளித்து வரும் மாண்புமிகு. முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

நாங்கள் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-SSA மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்-RMSA) தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் 1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினி விவரப்பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், பொறியாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணிநிலைகளில் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் (2002 முதல் 2012 வரை), மாவட்ட அளவில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மூலம் தொகுப்பூதியத்தில் (2014-15) முதல் வெவ்வேறு காலங்களில் பணியமர்த்தப்பட்டு தற்போது 5 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறோம். 

இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்களின் குடும்ப சூழலையும், பணி பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்த வேண்டுமாய் சிரம் தாழ்த்தி பணிந்து வேண்டி கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் எங்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்துவதால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையிலே செலவினங்கள் அடங்கிவிடும். அரசிற்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டு சமூக நீதியை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ள மாண்புமிகு அம்மாவின் அரசு அடுத்து வரும் சட்டமன்றத் தோ்தலிலும் மகத்தான வெற்றி பெற்று தொடா்ந்து பொன்னான ஆட்சியை வழங்கவுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஐயா அவர்கள் கருணைக் கூா்ந்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பாக பணிந்து கேட்டுக் கொள்கிறோம்

கடலூர் ராஜ்குமார்

மாநில ஒருங்கிணைப்ப்பாளர்

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம்-(SSCSWA) 34/2020





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive