பார்வையில் காணும் கடிதத்தில் , சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை , பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences ( NIMHANS ) - ன் psychiatric social work துறையுடன் இணைந்து drug demand reduction program என்ற தலைப்பில் ஆளுமை திறனை வளர்பபதற்கான 3 நாட்கள் பயற்சியினை மேற்படி நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உத்தேசமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200 ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை செய்யக் கோரப்பட்டுள்ளது . இப்பயிற்சியானது 40 நபர்கள் கொண்டு நடத்தப்படவுள்ளது . பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1500 / - பயணக் கட்டணமாக வழங்கப்படும் எனவும் , பயிற்சியின் போது தங்குமிடமும் மற்றும் உணவும் மேற்படி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது. அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து இணைப்பில் குறிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூர்த்தி ( as soft copy in excel file ) செய்து 27.02.2021 க்குள் இவ்வலுவலக வி 2 பிரிவு மின்னஞ்சல் v2sec.tndse@nic.in என்ற முகவரிக்கு அனுப்புமாறும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட தொகுப்பறிக்கையினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்புமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி –ஆசிரியர்கள்
பணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health
and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3
நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக்
கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...