Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

கவுரவ விரிவுரையாளர் வழக்கு தள்ளுபடி

law

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்துவதற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 2,331 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., 2019 அக்., 4ல் அறிவிப்பு வெளியிட்டது.அரசுக் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக, ஐந்து ஆண்டுகள் பணிபுரிவோரை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதில் விதிமீறல் உள்ளது.விதிகள்படி உதவி பேராசிரியர்களை, டி.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும்.அந்த இடத்தில், கவுரவ பேராசிரியர்களை நியமித்தால், தகுதியான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.

கவுரவ விரிவுரையாளர்களை, உதவி பேராசிரியர்களாக வரன்முறைப்படுத்த, தடை விதிக்க வேண்டும். 2019ல் டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார். இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அரசுத் தரப்பு, 'டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டதற்கும், கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்துவதற்கும் தொடர்பில்லை. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, புதிதாக நியமனம் மேற்கொள்ளப்படும். 'விதிகள்படி கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தது. இதை ஏற்று, வழக்குகளை நீதிபதி தள்ளுபடி செய்தார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive