தமிழகத்தில்
கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்க
திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 9,10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள அவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு கேள்விகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி பதில்களை பெற உள்ளனர்.
மாணவர்களுக்கு வினாக்கள் கொடுத்து அதற்கான உரிய விடைகளை கண்டுபிடிக்கும் வகையில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருவதால் அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள இந்த தேர்வு நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
தேர்வு இன்றி தேர்ச்சி என்பது வருந்தத்தக்க ஒன்றுதான்.தேர்வு நடத்தி தேர்ச்சி என்பது வரவேற்கப்படவேண்டிய, கட்டாயம் கடைபிடிக்கக்பட வேண்டியது ஆகும்.ஆனால் அந்த தேர்வு முறைதான் கவலைதரக்கூடியதாக உள்ளது.அரசுப்பள்ளி மாணவர்களில் எத்தனை மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு செல் வசதி உள்ளது என ஒரு கணக்கெடுப்பு நடத்தி நன்கு பயிலும் மாணவர்களின் மனோநிலையையும் கருத்தில் கொண்டு முடிவு எடுத்தால் மாணவர்களின் நலன் சிறப்பாக இருக்கும்
ReplyDelete