NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாட்டில் உயர்கல்விப்பயின்ற உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் இன்றைய நிலை ?

தமிழக ஆளுநர் அவர்களின் தலைமையில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில்163 வது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது

இந்த பட்டமளிப்பு விழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தத்தம் தனி மனித உரிமை , உயர்கல்வி விதிகளின் படியும் அவர்கள் பட்டங்களை பெற்றார்கள்.

அவர்களைப் பெற்ற எம்பில் பிஎச்டி மற்றும் முதுகலை உயர்கல்வி தகுதிக்கான பட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் பணி பதிவேடுகளில் இயற்றுவது நடைமுறையாகும் ஆனால் இந்த நடைமுறையை சில அரசு உதவி பெறும் பள்ளிகள் தத்தம் ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் பணிப் பதிவேடுகளில் ஏற்க மறுப்பதாக புகார்கள் வந்துள்ளன.

தமிழக அரசு கடந்த 30/ 6/ 2020-க்கு பிறகு பெறப்படுகின்ற பட்டங்கள் எதுவானாலும் அதற்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை என்று அறிவிப்பு , அரசாணையும்தமிழக அரசு  வெளியிட்டது இதன் விளைவால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் பெற்ற முதுகலை, எம்பில், மற்றும் பிஎச்டி பட்டங்களைவருகைப் பதிவேடு, பணிப்பதிவேடுகளில்வழக்கமாக பதியப்படும் உயர்கல்வி பட்டங்களை தற்போதைய தமிழக அரசின் நடைமுறையால் தத்தம் ஆசிரியர்களின் உயர்கல்வி பட்டங்களை ஏற்கவோ அல்லது வருகை பதிவேட்டில் பதிவு அல்லது அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிய இயலாது,  முடியாதுஎன்றுஅரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் வழியாக,   நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தமது உயர் கல்வியை பணிப்பதிவேட்டில் வருகை ப்பதிவேட்டில் பதிய வேண்டுகோள் வைக்கின்ற ஆசிரியர்களைசக ஆசிரியர்களின் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ள ஆசிரியர்களை மிரட்டுவதாகவும், அரசுப் பணியிலிருந்து நீக்கி விடுவதாகவும், அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க தடை விதித்துவிடுவதாகவும்தனிமனித உரிமைக்கு எதிராகவும் உயர்கல்வி விதிகளுக்கு எதிராகவும் தனி மனித மாண்பை சீர்குலைக்கும் வகையில் சில அரசு உதவி பெறும் பள்ளிகள்  செயல்பட்டு வருவதை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை தலையீடு அரசுப்பணி அமர்வு இருந்து அரசின் ஒப்புதல் பெற்று பட்டம் பெற்றுள்ள அரசு ஆசிரியர்களின்அவர்களின் உயர்கல்வி பட்டங்களை அங்கீகரித்து அவர்களின் வருகைப் பதிவேட்டில், பணிப்பதிவேட்டிலும்பரிந்து இடவும் 30 /6/ 2020-க்கு பிறகு பெறப்பட்ட பட்டங்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாண்புமிகு தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருத்த மன உளைச்சலோடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும்,ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும்,கரந்தைப் புலவர் கழகத்தின் சார்பிலும் மாண்புமிகு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இது தனி மனித மாண்பும் தனி மனித உரிமைக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக அரசின் அரசாணை நாள்30/ 6/ 2020 நீக்கம் செய்து அதற்குப் பிறகு பெறப்பட்ட உயர்கல்வி களுக்கு கட்டாயம் உடனடியாக இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு நடைமுறை அரசாணையை பின்பற்றி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.




1 Comments:

  1. 10/03/2020 க்கு முன் உயர் கல்வி பெற்றவர்க்கு இன்செண்டிவ் எப்பொழுது கிடைக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive