Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.10.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம் 45:பெரியாரைத் துணைக் கோடல்.

குறள் எண் : 450

குறள்:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள் :
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

பழமொழி :

Change is the law of nature.


 மாற்றமே இயற்கையின் நியதி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

அகங்காரம் மக்களின் உள்ளத்தில் பலவித அழகிய மாயத் தோற்றங்களை உருவாக்கும். ஆகவே அகங்காரத்தை தவிர்த்து வாழ்வது தான் சான்றோர் இயல்பு.....ரமண மகரிஷி

பொது அறிவு :

1.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன? 

மூன்று. 

2.சர்வதேச உணவுப்பொருள் எது? 

முட்டைகோஸ்

English words & meanings :

Hit the books - study hard, 

feel blue - feeling sad

ஆரோக்ய வாழ்வு :

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்


எதைச் சாப்பிட்டு எதைத் தவிர்க்க வேண்டும்?

1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

கணினி யுகம் :

Shift + H - Add rhomb, 

Shift + T - Add text

நீதிக்கதை

அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

29.10.21

★8-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

★அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, முதல்வர்  அறிவித்துள்ளார்.

★இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

★கிராமப்புற மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிப்பதற்கான பிரச்சார ஊர்தியின் பயணம் தொடக்கம்: திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஏற்பாடு.

★மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

★4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு அவசியம்.

★மீண்டும் லாக்டவுன்: ரஷ்யாவை உலுக்கும் கரோனாவால் மாஸ்கோவில் கடும் கட்டுப்பாடு.

★வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

★நீரஜ் சோப்ரா, மிதாலிராஜ், சுனில் சேத்ரி உள்பட 11 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கும்படி விருது கமிட்டி விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

★பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.




Today's Headlines

🌸Hall tickets for 8th class individual selectors are released today.

 🌸  Chief Minister has announced that the government will pay the tuition fees for Arunkumar, a  government school student and got selected in the IIT entrance examination.

 🌸 The Minister of Tamil Nadu School Education yesterday launched the 'Clean Health' e-Health Awareness Series organized by the "Hindu Tamil Direction daily." 

 🌸 Launch of the campaign vehicle to provide legal awareness to the rural people: Organized by the Tiruvallur District Legal Services Commission.

 🌸 The Supreme Court has quashed the ban imposed by the Mumbai High Court, allowing the National Examinations Agency to publish the results of the undergraduate NEET examination across the country.

 🌸 Undergraduate degree in 4 years with B.Ed.  The Central Ministry of Education will introduce an integrated teacher education program from the next academic year.  A national-level entrance examination is required to join this course.

 🌸 Lockdown again: Tight control in Moscow due to the outburst of Corona in Russia, which was shaken by this deadly virus. 

 🌸 North Korea's government has ordered people to eat less until 2025 as food shortages loom large.

 🌸 The award committee has recommended to the Sports Ministry that to give Kelratna award to 11 persons including Neeraj Chopra, Mithaliraj, and Sunil Chhetri.

🌸 Indian player Lakshya Sen has advanced to the next round of the French Open badminton men's singles tournament.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive