NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து பள்ளிகளுக்கான CEO அறிவுரைகள்!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்!
.com/img/a/

.com/img/a/

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிட நலம் / சுயநிதி / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் சுகாதாரத்துறையிலிருந்து பள்ளிகளுக்கு வருகை புரியும்போது ஒத்துழைப்பு நல்குமாறும் . மாணவ / மாணவியருக்கு தடுப்பூசி செலுத்த கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்துதருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு / நகரவை / ஆதி திராவிடர் நலம் /சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதை , தலைமையாசிரியர்ளை தொடர்பு கொண்டு உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வையிட வேண்டும்.

2 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினமும் அவர்களுடைய வட்டாரத்தில் உள்ள அந்தந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் தடுப்பூசிமுகாமில் மாணவ / மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தை அன்றைய தினமே மாவட்டக்கல்வி அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும் . அவ்விவரத்தை தொகுத்து , மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

3 ) தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு தனி அறை ஒதுக்கி தருதல் வேண்டும் . அவ்வறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் . மாணவர்கள் தடு பூசி செலுத்தும் அறைக்கு அருகிலேயே ஒரு அறை ஒதுக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயார் நிலையில் மாணவர்களை அமரச்செய்ய வேண்டும்.

4 ) மாணவ / மாணவியர் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் காலை / பிற்பகல் உணவு அருந்தினரா என தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

5 ) பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு வருகைபுரியும் மருத்துவர்களுக்கு உதவி செய்ய பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.

6 ) தலைமையாசிரியர்கள் அன்றைய தினம் முகாம் முடிந்தவுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவ மாணவியர் விவரத்தை முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ Click செய்து உள்ளீடு செய்யப்பட வேண்டும் .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive