மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல் :

transfer

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல் :

இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் என 131 பக்க PDF File அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அப்பட்டியலைத் தயார் செய்தது யாரெனத் தெரியவில்லை. மேலும் அப்பட்டியலில்,

1.மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. பிற மாவட்டத்திற்கு

என்ற இரு விருப்பங்களைத் தேர்வு செய்து விண்ணப்பித்தோரின் பெயர்கள் மட்டுமே உள்ளது. ஆனால், மாறுதல் விண்ணப்பம் அளித்த போது,

1. ஒன்றியத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

3. ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

4. பிற மாவட்டத்திற்கு

என்ற 4 விருப்பத் தேர்வுகள் இருந்தன. இதில், ஒன்றிய / மாவட்ட அளவிலான கலந்தாய்வுகளில் புதிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காத ஆசிரியர்களும் பிற மாவட்டத்திற்குச் செல்ல நடைபெறவுள்ள கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்கள்.

ஆனால், தற்போது பகிரப்பட்டு வரும் பட்டியலில் அத்தகையோரின் பெயர்கள் இல்லை. எனவே இது முழுமையான பட்டியல் அல்ல என்பதோடே முன்னுரிமையும் மாறக்கூடும் என்பதால், இது தவறான பட்டியல்.

ஒருவேளை இது துறைரீதியாக வெளியிடப்பட்டதுதான் என்றால் மேற்படி ஆசிரியர்களின் பெயர்களும் அடங்கிய முழுமையான பட்டியலை வெளியிட அறிவுறுத்த வேண்டும்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive