Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DPI - தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து தொடரும் போராட்டம்!

27121937ed60e22bf01e318105fb435b00956b29c5ffbb200490f790d49892d6.0

 பள்ளிக் கல்வி துறையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக் கல்வி துறையில் ஆசிரியர் நியமனம் செய்ய இருக்கின்றனர். இதில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நீண்ட காலமாக ஆசிரியர் தகுதி எழுதியிருக்கும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

13331 தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக சென்னை DPI வளாகத்தில் 2வது நாளாக நடந்த இந்த ஆசிரியர் போராட்டத்தை ஆதரித்து, DYFI சி.பாலசந்திரபோஸ் மாநில இணைச்செயலாளர் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.




2 Comments:

  1. TET சார்ந்த தொடர் போராட்ட முழக்கங்கள் அரசின் காதுகளில் ஒலித்தபாடில்லை. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கான அடையாளமே அந்நாட்டில்
    கல்வி, மருத்துவம் இரண்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருநது , அது சிறப்பாக இயங்குவதுதான். அரசின் இந்தத் தொகுப்பூதியத் திட்டம் ஊசலாடிக்கொண்டிருக்கும் சமூகநீதியின் கடைசிச் சொட்டு உயிரையும் காவு வாங்கிடத்துடிப்பது போல உள்ளது.

    2013ல் சூழ்ந்த இருட்டுக்கு விடியல் காட்டும் சூரியன் வந்துவிட்டான் என்று இன்னும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive