சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் விபரங்கள், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு உள்ளவர்கள், உரிய திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் 'ஆன்லைன்' கவுன்சிலிங்குக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு, 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், 1.69 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் விளையாட்டு பிரிவில் ஒதுக்கீடு கேட்டுள்ள, 3,000 பேரின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதே நேரம், விண்ணப்பித்த 1.69 லட்சம் பேருக்குமான, கல்வி, ஜாதி, வருமானம் மற்றும் பிற சான்றிதழ்கள், 'ஆன்லைன்' முறையிலேயே சரிபார்க்கப்படுகின்றன. மூன்று நாட்களாக நடக்கும் இந்த பணியில், சான்றிதழ்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா, சான்றிதழ் பதிவில் தவறுகள் உள்ளதா என, சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர் பாக, கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், www.tneaonline.org என்ற இணைய தளத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். பதிவேற்றும் முறை முழுமை பெறாவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ்களை, ஒரே 'பைல்' ஆக பதிவேற்ற வேண்டும்.

பதிவேற்றிய பின், வெளியேறவும் என்ற நிலை இருந்தால், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது என, எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிகரமாக முடிந்தது என்ற வாசகம் இருந்தால், சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக கருத வேண்டும்.இதில் சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்துக்கு சென்று, விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive