NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு

846641

  தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்திவழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின்தொகுப்பூதியம், நிலைப்படுத்தப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு ஏற்கெனவே கடந்தஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2,500 ஊதியம் பெறுவோருக்கு ரூ.50-ம், மாதம் ரூ.2,500-க்கு அதிகமாக பெறுவோருக்கு ரூ.100-ம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வுஉள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல, 2006-ம் ஆண்டுக்கு முன் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாகவும், 2016-ம்ஆண்டில் சம்பள விகிதம் மற்றும்தர ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றி, உயிரிழந்தவர்களின் மனைவி, அவர்களது குழந்தைகளுக்கு மாதம் ரூ.645வழங்கப்படுகிறது.

இவர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு உயர்த்தியுள்ளதுபோல 360சதவீதத்தில் இருந்து 373 சதவீதமாக ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை,அவரவர் வங்கிக் கணக்கில்செலுத்தப்படும். இவ்வாறு அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive