ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. தமிழக முதல்வர் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். “ஆதிதிராவிடர் மாணாக்கர் தமது பள்ளிக் கல்வியை இடைநிற்றல் இன்றி தொடர்ந்திடும் வகையில், மிகவும் பழுதடைந்துள்ள, சேத்தியாதோப்பு, குளித்தலை, மீன்சுருட்டி, திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவர் விடுதிகள் மற்றும் நிலக்கோட்டை, செய்யூர், வந்தவாசி,
செஞ்சி மற்றும் திருப்பனந்தாள் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவியர் விடுதிகள் என மொத்தம் 10 விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45. 45 கோடி செலவில் கட்டப்படும்’’ மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு பழுதடைந்த 10 ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ/ மாணவியர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.44.58 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...