NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் (3:2) கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு

 


images(217)
உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு 2019-ல் கொண்டு வந்தது. 103வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இடஒதுக்கீடு வரம்பு 50%த்தை மீறக்கூடாது என்ற விதியை மீறியது, ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி? எந்த அளவுகோலின் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டது? என்பது போன்ற அடிக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.


சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளை மீறி உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக திமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் என்னு திமுக எம்.பி. வில்சன் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமத்துவத்தை பின்பற்ற சொல்லும் அரசியல் சட்ட பிரிவு 14க்கு எதிரான அநீதி என்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது என்றும் திமுக வாதிட்டது.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த சட்ட திருத்தம் முறையானது என்று வாதிட்டனர். அனல்பறந்த வாத பிரதிவாதங்களுடன் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதிபதி மகேஸ்வரி ஆதரவு

இடஒதுக்கீடு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யும் தருணம் வந்துவிட்டது. 10% இட ஒதுக்கீடு செல்லும்; அதில் எந்தவித விதிமீறல் இல்லை. சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி பேலா திரிவேதி ஆதரவு

10% இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் 50%இடஒதுக்கீடு என்ற வரையறையை மீறவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10%இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி பர்திவாலா ஆதரவு

ஒவ்வொரு ஒதுக்கீட்டுக்கும் கால நிர்ணயம் தேவை என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு

10% இடஒதுக்கீட்ட்டுக்கு நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 10%இடஒதுக்கீடு சட்டவிரோதம். தற்போதைய 10% இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் இதயத்தையே தாக்குவது போல் உள்ளது. இந்த சட்டத் திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இட ஒதுக்கீடு 50% மீற அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும். தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டு என்பது அங்குள்ள எஸ்சி, எஸ்.டி மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பின்பற்றுவது


எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரை புறந்தள்ளி ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒன்று. 10% இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் சமூக பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது. இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்ஙாமவர்களுக்கானது என்ற நிலை என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்திற்கு மாற்றுகிறது. என்று தெரிவித்தார். இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன், இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive