நவ.28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2022-23ம் கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும் EMIS இணையதள வாயிலாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
இக்கலந்தாய்வு 09.12.2022ம் தேதி அன்று நடைபெறும்.மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...