என்ஜினீயரிங் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. தமிழகத்தில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்களுக்கு நடந்த இந்த கலந்தாய்வில் 4 சுற்று முடிவில் 93 ஆயிரத்து 571 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த 9-ந் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த 13-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான அவகாசம் முடிந்தநிலையில் இதுவரை 9 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நேற்று முன்தினமும், நேற்றும் அதற்கான சேவை மையங்கள் வாயிலாக நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், பொது, தொழிற்கல்வி, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் நடக்க இருக்கிறது. தொடர்ந்து, எஸ்.சி.ஏ. காலியிடங்களில் எஸ்.சி. வகுப்பினருக்கான கலந்தாய்வு 24 மற்றும் 25-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த கலந்தாய்வு 25-ந் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...