கஞ்சா போதையில் உருட்டை கட்டையால் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.
விழுப்புரம்: நவம்பர் 16:
விழுப்புரம் மாவட்டம் , கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை உருட்டு கட்டைகளால் கஞ்சா போதையில் இருந்த 12ம் வகுப்பு மாணவன் தாக்கினான்.
வகுப்பில் ஒழுங்கினமாக நடந்து கொண்ட மாணவனை தலைமையாசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் கஞ்சா போதையில் தன் வகுப்பு நண்பர்களுடன் தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்து
தலைமையாசிரியரை உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இரத்த வெள்ளத்தில் அறைக்குள் கிடந்த தலைமை ஆசிரியரை மற்ற ஆசிரியர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை (ICU) பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...