பள்ளிகளில்
மாணவர்களை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த
வேலையிலும் ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள்
மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூரில்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை
சந்தித்த அவர் கூறியதாவது: மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு
எழுதுங்கள்.நான்
மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை
கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார்.
அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை
கொண்டுள்ளார் என்பது தெரிகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது
தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும்.
அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான்
எங்களின் நோக்கம். அதேப்போல் தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக
இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்ளை கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் தவறு செய்கிறவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படுவதில்லை.
ReplyDelete