Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.02.23

 


 

 

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் எண்: 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

பழமொழி :

Measure is treasure. 

அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

காலம் மிகவும் நம்மை கவனிக்கத்தக்கது.இன்பமும் துன்பமும் முன் காலத்தின் பயனின்று கிடைப்பதுவே._____ ஸ்ரீ ராமர் 

பொது அறிவு :

1. கல் உப்பின் வேதியல் பெயர் என்ன ?

 சோடியம் குளோரைடு

 2. காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் கருவி எது ? 

 ஹைக்ரோ மீட்டர்

English words & meanings :

ant that feels bad for his mistakes- Repentant

ஆரோக்ய வாழ்வு :

தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.




NMMS Q

தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த எம் முறை பயன்படுத்தப்படுகிறது

விடை :மரபு வகைப்பாட்டு முறை

நீதிக்கதை

இரண்டு அணில்கள்

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.

அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்

09.02.2023

* “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஆவின் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* செயல்பாடுகள், சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதலிடம்: சேலம் மருத்துவமனைக்கு 2-ம் இடம், கோவைக்கு 3-ம் இடம்.

* சென்னை, கோவை, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 63 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பு: மத்திய அரசு தகவல்.

* கடந்த 6 ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார்.

* எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

*தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் தொடங்கியது.

* ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு.


Today's Headlines

* Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that the higher education enrollment of women has increased by 27 percent compared to last year due to the new women's program PUDHUMAI PENTHITTAM

 * Tamil Nadu Government has decided to fill the vacant posts of Avin through TNPSC.

 * Chennai Rajiv Gandhi Government General Hospital ranks first in Tamil Nadu in terms of operations and treatment: 2nd to Salem Hospital and 3rd to Coimbatore.

* Organizat of 63 Software Technology Parks across the country including Chennai, Coimbatore, and Puducherry said by Central Govt.

 * According to the central government, 30 lakh Indian students have gone abroad for higher education in the last 6 years.

 * Indian-American student Natasha Periyanayagam has been ranked in the list of smartest students in the world for the 2nd time.

 * Russia's ambassador to India, Denis Alibov, has said that the 3rd batch of S-400 missiles will be delivered to India soon.

 * National Junior Table Tennis Tournament started in Chennai.

* Indian player Subman Gill was shortlisted for *The Best Player of the Month* award for January.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive