அதிகம் மட்டுமின்றி, பொருளாதார காரணங்களால் பலராலும் அதை வாங்குவது சிரமம் தான்.
இதுபோன்ற சூழலில், புதுப்பிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் தேவை வருகிறது. ரீபர்பிஸ்டடு அல்லது புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பது பயன்படுத்திய போனை, அதன் பழைய நிலைக்கு கொண்டு வந்து, குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது ஆகும். பழைய ஸ்மார்ட்போன், நீண்ட காலம் பயன்படுத்திய பின்னர், அதனை குறைந்த விலைக்கு விற்பதாகும். இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. விற்பனையாளர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்:
புதுப்பிக்கப்பட்ட போனை வாங்கும் போது முதலும், முக்கியமா கவனிக்க வேண்டிய அம்சம். விற்பனையாளர் யார் என்பது தான். ஸ்மார்ட்போன் விற்பதில், நீண்ட, அனுபவமிக்க, நம்பிக்கையான, நல்ல பெயருடன் விளங்கும் விற்பனையாளரிடம் இருந்து வாங்கலாம். மேலும் அதனை உறுதிப்படுத்தி கொள்ள, ஆன்லைன் ரிவியூ, விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் அளித்துள்ள ரேட்டிங் போன்றவற்றை ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
2. வாரண்டியை சரிபாருங்கள் :
புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்கும் போது, வாரண்டி இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒருவேளை ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யாதபட்சத்தில், வாரண்டி பொருந்துமா என கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வாரண்டி இல்லாமல் இருந்தால், அதனை வாங்காமல் இருப்பது நல்லது.
3. போன் நிலைமை சரிபாருங்கள் :
நீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தால், விற்பனையாளர் போனின் அனைத்து கோணத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளாரா என பாருங்கள். ஏதேனும் சேதம் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் தொடுதிரை, கேமரா மற்றும் சார்ஜ் பாயிண்ட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்க வேண்டும். நீங்கள் பழைய போனை வாங்கினால், சில தேய்மானங்கள் இருப்பது சகஜம். அதனை ஏற்றுகொள்ள தான் வேண்டும். இருப்பினும், ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்வது முக்கியம்.
4. பேட்டரி திறனை சரிபாருங்கள் :
புதுப்பிக்கப்பட்ட போனை வாங்கும் போது, கவனிக்க வேண்டிய மற்றுமொரு அம்சம் பேட்டரி திறன். பேட்டரி எவ்வளவு நேரம் நீடிக்கிறது மற்றும் உடனே தீர்ந்து போவதில்லை என்பதை உறுதி செய்யுங்கள். பேட்டரி திறன் 80 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அதனை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. விற்பனையாளரிடம், பேட்டரி ,போனுடன் வந்த ஒரிஜினல் பேட்டரியா அல்லது வேறு பேட்டரி ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
5. அக்சஸரிஸ் ஒரிஜினலா என்பதை பாருங்கள் :
நீங்கள் வாங்கும் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனுடன், வரும் சார்ஜர், இயர்போன் மற்றும் பயனர் கையேடு போன்றவை ஒரிஜினலா என்பதை பாருங்கள். ஒருவேளை, ஒரிஜினலாக இல்லாதபட்சத்தில், அதை வாங்காமல் இருப்பது நல்லது.
6. விலையை கருத்தில் கொள்ளுங்கள் :
கடைசியாக, புதுப்பிக்கப்பட்ட மொபைல் போனின் விலையை கருத்தில் கொள்வது அவசியம். புதிய ஸ்மார்ட்போனை விட, புதுப்பிக்கப்பட்ட போனின் விலை சற்று குறைவாக இருக்கும். புதிய போன் விலைக்கும், புதுப்பிக்கப்பட்ட போன் விலைக்கும் வித்தியாசம் குறைவாக இருந்தால், புதுப்பிக்கப்பட்ட போன் வாங்குவதை தவிர்க்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட போன் வாங்குவது நம் பணத்தை சேமிப்பதற்கு தான். எனவே, மேற்கண்ட அம்சங்களை சரிபார்த்து உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கப்பட்ட அல்லது பழைய ஸ்மார்ட்போனை வாங்குங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...