அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களில் பலர், ஜே.இ.இ., பிரதான தேர்வில் பங்கேற்றனர்; 260 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நேரடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
எனவே, அந்த மாணவர்களுக்கு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உணவு, இருப்பிட வசதி அளித்து, ஜூன் முதல் வாரம் வரை, இலவச பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...