அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...
அரசுப்பள்ளி நம்பள்ளி....
சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...
அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது
அரசு அறிவிப்பு.
✳️LKG முதல் 8ஆம் வகுப்பு வரை .
✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..
✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..
✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...
✳️கட்டணமில்லா கல்வி...
✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் 20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில
7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .
✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 ,
ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000,
ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .
✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 ,
ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000,
ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.
✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...
✳️விலையில்லா குறிப்பேடுகள்- 3 பருவம்
✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.
✳️விலையில்லா புத்தகப்பை.
✳️விலையில்லா காலணிகள்.
✳️வண்ண பென்சில்கள்.
✳️கணித உபகரணப் பெட்டி.
✳️புவியியல் வரைபட நூல்.
✳️தினந்தோறும் முட்டையுடன் சத்துணவு.
✳️இலவச பேருந்து பயண அட்டை...
✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...
✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...
✳️ விலையில்லா மிதிவண்டி...
✳️ விலையில்லா மடிக்கணினி...
இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....
"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"
அன்பு பெற்றோர்களே,
தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...