பள்ளிக்
கல்வி - மறுநியமனம் பணிபுரியும் ஆசிரியர்கள் பெறும் பள்ளிகளில்
கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு
கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session )
தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண்-115 இன் படி 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள் அனைவரும், அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இக் கல்வியாண்டில் இறுதி வேலை நாளான 28.4.23 அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
எனவே அவ்வாறு மறு நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் 28.4.23 அன்று பணியிலிருந்து விடுவிக்க அனுமதி கோரும் கருத்துருக்களை சம்மந்தப்பட்ட CEO அவர்களுக்கு அனுப்பி வைத்து அனுமதி பெற்ற பின்னரே அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அரசாணையில் தெரிவித்து உள்ளவாறு இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளுக்கு பின்னர் அவர்கள் மறு நியமனத்தில் பணியாற்றிட இயலாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...