கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணி செய்ய தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, 2022-23-ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலைநாள் முடிய பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...