Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்

 

 .com/

நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்


1.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌.


2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3.'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும். 5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை தூண்டும் திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும்.

எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினாவிற்கும்  4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் ஆகும்.


7. தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். அவசரப் படுதல் கூடாது. ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது.


8. அதிக மதிப்பெண் பெற உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும்.


11.நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 

2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 

3) சரியான இனை எது? 

4) தவறான இனை எது ?

5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 

6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 

7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 

8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 

9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?

 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், புத்தகங்களின் பெயர்கள்,வேறு பெயர்கள், வினைகள் நடைபெறும் இடம்,சுவாச ஈவு , சுவாச நிறமிகள், இதய அறைகள் மற்றும் செவுள்களின் எண்ணிக்கை,மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, சரியான Abbreviation  எது ? சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள் , தாவரங்களில் காணப்படும் வேர்,தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன் நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்


- NEET ஆசிரியர் குழு





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive