Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விநாயகரை பற்றிய 30 தகவல்கள்

*🐘 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகரை பற்றிய 30 தகவல்கள்:1. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.

2. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. துதிக்கையில் தண்ணீர்க்குடம். பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். முன் கைகளில் வலதுகையில் தந்தம், இடது கையில் மோதகம்.

3. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.

4. அமெரிக்காவில் விநாயகருக்காக விவேகானந்தர் கோவில் கட்டினார்.

5. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.

6. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியை தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.

7. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.

8. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.9. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.

10. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

11. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

12. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.

13. இப்பூவுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

14. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம்- சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

15. விநாயகருக்கு தேங்காய் எண்ணை காப்புதான் மிகவும் பிரியமானது. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.

16. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசுரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

17. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

18. சக்தியையும், சிவனையும் வேண்டிக்கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.

19. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

20. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

21. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.

22. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

23. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

24. விநாயகர் என்றால் அவரைவிட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

25. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

26. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

27. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப் படுகின்றார்.

28. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

29. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

30. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive