விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி?


கந்தர்வர்களின் மன்னன் பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட..  

கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானா லும் செல்லு ம் திறனுடையவர்கள். அதன் படி ஒருநாள் இம யமலைச்சா ரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிரு ந்தான் கிரவுஞ்சன்.

திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று அவனது கண்களை வசீகரிக்க., அப்படியே நின்றான். அந்த இடத்தை நோக்கிப் பார்வை யைச் செலுத்தினான்.

"ஆஹா, என்னவொரு அழகு?’'என்று தன் னை அறியாமலேயே புகழ்ந்தான். அவன் புகழ்ந்தது ஒரு அழகான இளம் பெண் ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை. அவள் பெயர் மனோ ரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி.

பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியுடன் வாழ்ந்து வந்தாள் அவள் தனது குடிலில் செடியில் இருந்து பறித்த பூக்களை மாலையாக தொடுத்து கொண் டிருந்த போது கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள்.

அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான். அவனைப் பார்த்த உடன் சட்டென்று எழுந்து விட்டாள் மனோரமை.

எதிரில் வருவது யார்? என்பது தெரியாத தால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினா ள். ஆனால், அவனோ போதை தலைக்கேறிய வன் போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

இப்போது அவளை மிகவும் அருகில் நெரு ங்கி விட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளே பேசினாள்.

“தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்க ளுக்கு என்ன வேண்டும்?” என்று மனோரமை கேட்டாள்.

அவளிடம் பதில் சொல்லும் நிலைமையி லா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழ கைப் பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?

மனோரமை கேட்ட கேள்விக்கு பதில் சொல்வ தற்கு பதிலாக, பார்வையாலேயே தின்று விடு வதுபோல் அப்படியொரு பார்வை பார்த்தான்.

கூனிக் குருகி, லேசாக தலை குனிந்து நின்றி ருந்தாள் மனோரமை. பருவச்செழி ப்பு அவளது மேனியில் நிறையவே கொ ட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத் தண்டுக் கால்களும் அவனை என்னமோ செய்தன.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வ தற்கு பதிலாக, வேகமாக அவளது கையைப் பற்றி னான். தன் மார்போடு இறுக அணைத்தான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள்.

'‘உதவி... உதவி...’' என்று கத்தினாள்.

குடிலை நெருங்கி கொண்டிருந்த சவுபரி முனி வர், தனது பத்தினி மனைவியின் அலறல் கே ட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார்.

தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முய ன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத் தில் பொங்கியெழுந்தார்.

“அடே கந்தர்வா...” என்று அவரது கொந்த ளிப் பான குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றா ன் கிரவு ஞ்சன். அப்போதுதான் அவனுக்கு செய்த தவறு நினைவுக்கு வந்தது.

மனோரமையை தனது பிடியில் இருந்து விட்டு விட்டு முனிவர் பக்கம் திரும்பினா ன். முனிவரி ன் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அவனுக்கு சாபமிட்டார்.

“எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்கா த என் தர்ம பத்தினியின் கையை பிடித்து இழு த்து அவளை அடைய முயன்ற உன் னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண் ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச் சாளியாக மாறுவாயாக...” என்று சபித்தார் முனிவர்.

கிரவுஞ்சனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினான்.

“என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே. தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்க ளை மறைத்து விட்டது. அவளது அழகில் மய ங்கி, இப்படியொரு தவற்றை செய்யத் துணி ந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு அளித்த சாபத்தைத் திரும்பப் பெறுங்கள்...” என்ற படி கிரவுஞ்சன் முனிவரி ன் காலில் விழுந் து கண்ணீர் விட்டு அழுதான்.

“தவறு செய்தவன் தண்டனையை அனுப வித் துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”.

“அப்படியென்றால், எனக்கு பாவ விமோசன மே கிடையாதா?”

“கண்டிப்பாக உண்டு. விநாயகப் பெருமான் உன்னை காப்பாற்றுவார்...” என்றார் சவுபரி முனிவர்.

அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியா க மாறிய கிரவுஞ்சன் காட்டுக்குள் ஓடினான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அதே பகுதியில் புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அவதரித்தார்.

ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்க யிற் றை வீசினார் விநாயகர் அதில் சிக்கி க்கொ ண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடி யவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற் றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தன து செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். பின் அதைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive