இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் திட்டமிட்டபடி லேண்டர் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி சூரிய வெளிச்சம் கிடைத்ததும் ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதற்கு முன் நிலவின் மேற்பரப்பில் மீண்டும் மேல் எழுப்பி இஸ்ரோ சோதித்தது. மேலும், லேண்டர் நிலவின் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...