இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில், கம்ப்யூட்டர் கேமிங் மற்றும் காமிக்ஸ் கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை சேர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அனைத்து துறைகளிலும், தகவல் தொழில்நுட்பம் என்ற, ஐ.டி., செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ., தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் என்ற, கணினி வழி கோடிங் கட்டுப்பாடுகள், கிராபிக்ஸ் போன்றவை, அனைத்து தொழிற்துறைகளிலும் கோலோச்சி வருகின்றன.
பொழுது போக்கு, கலை, கலாசார நிகழ்ச்சிகள், சினிமா, ஊடகம், விளம்பரம், வர்த்தக நிறுவன தகவல் பலகைகள் மற்றும் பள்ளி, கல்லுாரி பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோ தயாரிப்பு போன்றவற்றில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் என்ற துப்பறியும் அனிமேஷன் வீடியோக்கள் போன்றவை முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
வெளிநாட்டு திரைப்படங்கள், விளம்பர வீடியோக்கள், தொழில் நிறுவன தகவல் பணிகளுக்கு, இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து, தொழில்நுட்ப பணிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு அதிக மவுசு உள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லுாரி பாடங்களில், இந்த அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், புதுப்பிக்கப்பட்ட கொள்கை வகுக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்ஜினியரிங் பாடங்களில், கம்ப்யூட்டர் கேமிங் மற்றும் காமிக்ஸ் தொழில்நுட்ப தகவல்களை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களையும், இளைய சமுதாயத்தையும் பாதிக்காத வகையில், புதிய தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாக வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்த, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...