பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் காலங்களாக ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே நாளை ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலாளராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோல் வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பத்தை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறார். டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...