Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SEAS தேர்வு நடைபெறும் பள்ளி தலைமையாசிரியரின் பணிகளும் பொறுப்புகளும் - Proceedings

மாநில கல்வி அடைவுத் தேர்வு SEAS நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


பார்வையில் காணும் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மாநில அடைவுத்தேர்வு 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இத்தேர்வு 3.11.2023 அன்று மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.


ஆய்வு மேற்கொள்ளவுள்ள பள்ளியின் தலைமையாசிரியரின் பணிகளும் பொறுப்புகளும்:

தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் கட்டுகள் தங்கள் பள்ளிக்கு உரியதுதானா என்றும் மற்றும் வகுப்பு, Medium சரிபார்த்து வட்டார அளவிலான அலுவலர்களிடம் பெறுதல்.


நவம்பர் 2 அன்று தேர்வை நடத்தும் களப்பணியாளரிடம் (FI) பள்ளி வினாநிரல் (SQ), ஆசிரியர் வினாநிரல் (TQ) முடிந்து மீண்டும் பெற்று தனி அலமாரியில் வைத்து பூட்டி பாதுகாத்தல்.

> நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குதல்.


> பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் 02.11.2023 மற்றும் 03.11.2023 ஆகிய நாட்களில் எவ்வித விடுப்பும் இன்றி பள்ளிக்கு வருகை புரிதலை உறுதிபடுத்தவேண்டும்.


> அடைவு ஆய்வு நடக்கும் அறையின் வெளிச்சம், காற்றோட்டம், சரிபார்த்தல்.

> வினாத்தாள் தொகுப்பிற்கான மந்தணத்தன்மையை பாதுகாத்தல்.


அடைவுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் தொகுப்பு SQ, TQ, PQ மற்றும் OMR / Field Note பயன்படுத்தப்பட்ட படிவங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத படிவங்களை தனித்தனியாக உறையில் வைத்து அன்று மாலையே வட்டார அளவிலான பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைத்தல்.


> வினாத்தாள் நகலெடுத்தல், பார்த்தல், பகிர்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

> தேர்வு நடைபெறும் போது கள ஆய்வு பணியாளர் (FI) தவிர தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற நபர்கள் தேர்வு அறைக்கு செல்லக்கூடாது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive