Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு ‘இளம் கவிஞர் விருது’ - மாவட்ட அளவில் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது

 1155753

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 

தமிழக அரசின் அறிவிப்புபடி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ‘இளம் கவிஞர் விருது’ மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒன்றியளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்ததலா 3 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி நடத்தப்படும். அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டிகள் சென்னையில் நவம்பர் 30-ம் தேதி நடைபெறும். அதில் மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மகாகவி நினைவு தினத்தன்று இளம் கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive