கால்சியம் ஹைட்ராக்சைடு |
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:413
செவி உணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும்,
அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
Necessity knows no low.
ஆபத்துக்கு பாவம் இல்லை
இரண்டொழுக்க பண்புகள் :
*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.
*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.
பொன்மொழி :
கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.
- - சீனப்பழமொழி
பொது அறிவு :
1. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
2. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள்உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.
நீதிக்கதை
நம் வார்த்தை நம் கையில்
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவருக்கு இரவில் தூங்கும் பொழுது வந்த கனவில் ராஜாவிற்கு பற்களெல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதைப் போல் கண்டார்.
காலை எழுந்தவுடன் ராஜாவுக்கு கனவின் பலன் என்ன? என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. எனவே தன் நாட்டில் உள்ள ஜோதிடர் ஒருவரை அழைத்தார். தன் கனவின் பலனை கேட்டார்.
அவரும் சாஸ்திரங்களை எல்லாம் ஆராய்ந்து கனவின் பலனாக அரசே தங்களுக்கு முன்னரே தங்கள் உறவினர்கள் ராணி இளவரசர், இளவரசி அனைவரும் இறந்து விடுவார்கள் என்று கூறினார்.
இதனைக் கேட்ட அரசர் கோபமடைந்து அவருக்கு தண்டனை விதித்தார். ஆனாலும் அரசருக்கு கனவின் பலனை சரியாக அறிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டது.
எனவே, மற்றொரு ஜோதிடரை அழைத்து கனவின் பலனை கூறுமாறு கேட்டார்.
அவரும் சாஸ்திரங்கள் எல்லாம் ஆராய்ந்து அரசே! தங்கள் உறவினர்கள் ராணி,இளவரசர், இளவரசி ஆகியோரை விட தாங்கள் நீண்ட வருடங்கள் நிறைவாக வாழ்வீர்கள் என்று கூறினார்.
அரசர் மிகவும் சந்தோசம் அடைந்து அவருக்கு பொன்னும் பொருளையும் பரிசாக கொடுத்தார்.
இரண்டு ஜோதிடர்களும் கூறியது ஒரே கருத்தைத்தான். ஆனால் பயன்படுத்திய வார்த்தைகள் தான் வேறு.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...