புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20 வரை வகுப்புகள் நடைபெறும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட வகுப்புகள் அதிகரித்துள்ளது. தினசரி 7 வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் 8 வகுப்புகளாக நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் 9.15 வரை Assembly நடைபெறும். காலை 9.15 மணி முதல் 10.00 am வரை முதல் வகுப்பு தொடங்கும் பின்பு காலை 10.00 மணி முதல் 10.45 am வரை இரண்டாம் வகுப்பு நடைபெறும்.
காலை இடைவேளை 10.45 மணி முதல் 10.55 வரை இருக்கும் அதன்பின்பு காலை 10.55 மணி முதல் 11.40 am வரை மூன்றாம் பாடமும் காலை 11.40 மணி முதல் 12.25 pm வரை நான்காம் பாட வேலை நடைபெறும்.
மதிய உணவு இடைவேளை 12.25 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் 1.30 மணி முதல் 2.10 pm வரை 5ம் வகுப்புகளாக நடைபெறும். மதியம் 2.10மணி முதல் 2.50 pm வரை 6ம் பாடவேளை நடைபெறும். மாலை இடைவேளை 2.50 மணி முதல் 3.00 வரை இருக்கும்.
மதியம் 3.00 மணி முதல் 3.40 pm வரை 7ம் பாடவேலையாகவும், மதியம் 3.40 மணி முதல் மாலை 4.20 pm வரை 8ம் பாடவேலை வகுப்புகளுடன் பள்ளி முடிவடையும். இந்த அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...