
மதுரை
மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 14.07.2025 திங்கட்கிழமை அன்று, மதுரை
மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும்
அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் 14.07.2025 அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும்
அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள். ஆசிரியர்கள்
மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 சனிக்கிழமை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது.
14.07.2025 அன்று மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...