Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய ( 25.7.2025 ) SMC கூட்ட அறிக்கை மாதிரி


%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20-%2025.07.2025_20250724_113109_0000 
இன்றைய ( 25.7.2025 ) SMC கூட்ட அறிக்கை மாதிரி

*பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

*இடம்:*********

*நாள்: 25-10-2025 மாலை 3:00-4:30 மணி .

*இன்று எம் பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் 'முதல் கூட்டம்' நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.*********  அவர்கள் தலைமையிலும், ஏனைய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தும் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களைபெற்றோர் செயலியில்  வருகையை பதிவு செய்த பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்  வரவேற்புரை நிகழ்த்தி, முன்னதாக தெரிவிக்கப்பட்ட முக்கிய கூட்டப் பொருள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.

*இக்கூட்டத்தின் தீர்மானங்களான.....

 *∆ மாநில கற்றல் அடைவு SLAS மற்றும் திறன் மேலாண்மை பங்கு பற்றி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பது என தீர்மானிக்கப்படுகிறது

*∆ எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகள் சத்தமாக வாசிக்க 10-15 நிமிடங்கள் பெற்றோர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது

*∆ பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கான உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்குவதை 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' இணையதளத்தில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது

*∆ மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் உபகரணங்கள் பற்றி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள தீர்மானிக்கப்படுகிறது

*∆ குழந்தைத் திருமணம், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் முறைகளால் விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது

*∆ NSNOP மூலம் வழங்கப்படும் பள்ளியின் தேவைகளை அளவீடு செய்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றி செயலியில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது.

*∆ POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.

*∆ பள்ளிக்கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14 417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.

*∆ ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை உருவாக்கும் வகையில் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

*∆ மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.

 *∆ மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கியில் பணம் சேமிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்க தீர்மானிக்கப்படுகிறது.

         *மேற்காணும் கூட்டப் பொருள் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி விவாதித்து பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்காண் பொருள் சார்ந்து அனைத்து செயல்பாடுகளுக்கும்  ஒத்துழைப்பு  அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

*மேலும் 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளி ஒருங்கிணைந்த மானியத்திலிருந்து  ரூபாய்----------யை-------,--------,------------ போன்ற செலவினங்களை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

(மேலும் அந்தந்த பள்ளி சூழல் சார்ந்து ஏதேனும் தீர்மானங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக தத்தம் பள்ளிகளில் பணி மாறுதல் காரணமாக ஓய்வு காரணமாக காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் மாற்றுப் பணியில் அல்லது SMC மூலமாகவோ தற்காலிக ஆசிரியர் நியமிக்க தீர்மானிக்கப்படுகிறது என்று தீர்மானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். )

   *இறுதியாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களை செயலியின் உரிய பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு இனிப்பு ,தேநீர் வழங்கி, பள்ளியின் ஆசிரியர் பிரதிநிதி திரு/திருமதி********** அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

நன்றி 🙏🏻





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive