Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள்_பொறுப்பை #ஆசிரியர்கள்_எங்கள்_மீது #திணிக்க_வேண்டாம்..!

1000231385 
✍️❤️வீடுகளில் தான் குழந்தைகள் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்:

01 - காலை வணக்கம் 
02 - மாலை வணக்கம் 
03 - இரவு வணக்கம் 
04 - ஹலோ
05 - தயவுசெய்து
06 - நான் வரலாமா / நான் செய்யலாமா
07 - மன்னிக்கவும்
08 - என்னை மன்னியுங்கள்
09 - மிக்க நன்றி
10 - நன்றி
11 - நான் தவறு செய்துவிட்டேன்

✍️❤️வீடுகளில் தான் இவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்:

01 - கடவுளுக்குப் பயப்படுதல்
02 - நேர்மையாக இருத்தல்
03 - நேரந்தவறாமை
04 - அவமதிக்காமை
05 - மரியாதையாக இருத்தல்
06 - பொய் பேசாதிருத்தல்
07 - போதைக்கு அடிமையாகதிருத்தல்
08 - தவறான சேர்க்கைகளை தவிர்த்திருத்தல்
09 - அனைவரையும் மதித்தல்

✍️❤️மீண்டும் ஒரு முறை 
இவற்றையும் வீடுகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்:

01 - அளவாக உண்ணுதல்
02 - வாயில் உணவுடன் பேசாதிருத்தல்
03 - தனிப்பட்ட சுகாதாரம் பேணுதல்
04 - குப்பைகளை தரையில் வீசாதிருத்தல்
05 - பெற்றோர்களுக்கு அவர்களின் அன்றாட வேலைகளில் உதவுதல்
06 - உங்களுக்குச் சொந்தமில்லாத பொருட்களை எடுக்காதிருத்தல்
07- உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருத்தல்.

✍️❤️மேலும் வீடுகளில் தான் இவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்:

01 - ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்
02 - நமது காரியங்களைக் நாமே கவனித்துக் கொள்ளுதல்
03 - மற்றவர்களின் பொருட்களைத் தொடாதிருத்தல்
04 - விதிகளை மதித்தல்
05 - கூடாத சொற்கள் பேசாதிருத்தல்.
06 - பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடாதிருத்தல்

✍️❤️இவையாவும் பெற்றோர்களாகிய நீங்கள் வீடுகளில் உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியவை.
ஏனென்றால், பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியவை:

* கணிதம்
* ICT
* ஆங்கிலம்
* வரலாறு
* இலக்கியம்
* அரசியல் 
* புவியியல்
* வெளிநாட்டு மொழி
* சமூக விஞ்ஞானம் 
* பௌதீகவியல்
* இரசாயனவியல்
* உயிரியல்
* உடற்கல்வி
* கலை
* குடியியல்
* பொருளாதாரம்
* விவசாய விஞ்ஞானம் 
* வணிகம்
* மனைப் பொருளியல்
* தொழில்நுட்பம்
* சித்திரம் 
* நடனம் 
* நாடகமும் அரங்கக்கலையும்
* ஊடகம் 
* நாகரிகம் 
* கணக்கீடு
போன்ற பல பாடங்களையும் வழங்கப்பட்ட நேரசூசிக்கமைய கற்பித்து திணைக்களங்களும் அதிகாரிகளும் எதிர்பார்க்கின்ற பெறுபேறுகளுக்காக மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கின்றது. இவற்றைத் தாண்டி இணைபாட விதான செயற்பாடுகள் ஏராளம்.

✍️தேவை ஏற்பட்டால் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொண்டதை வலுப்படுத்திவிட முடியுமே தவிர வேறோன்றும் செய்து விட முடியாது.

✍️நீங்கள் தான் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கட்டுப்பாட்டுடனும் கட்டுக்கோப்புடனும் கண்டிப்புடனும் வளர்த்தெடுக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்புடையவர்களாக இருக்கின்றீர்கள்.

✍️ஏனென்றால் வீட்டில் மாணவர்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்தே தனிநபர்களாகிய அவர்கள் மதிப்பு மிக்கவர்களாக தோற்றம் பெறுகிறார்கள்

✍️அனைவரின் வாழ்வையும், சுதந்திரத்தையும், உடைமைகளையும் மதிக்க வேண்டிய பண்பை வீட்டில் இருந்தே பெறுகின்றார்கள்.

ஆனால் இன்று நிலைமை அவ்வாறாகவா இருக்கின்றது..??

✍️அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

✍️தீமை நிலை நிறுத்தப்பட்டு, நன்மைக்கு எதிராகப் போராடும் சமூகப் போக்கிற்குள் நாம் வாழ்கிறோம்.

✍️நீங்கள் வீடுகளில் கற்பிக்க தவறிய விடயங்களை நாம் பாடத்தை தாண்டி அவற்றை கற்பிக்க முனையும்போது ஆசிரியர்களுக்கு மிஞ்சியது அவமானமும் ஆபத்தும் மட்டுமே.

✍️ஏனெனில் சமீபகாலமாக, தற்போதைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அசாதாரண நடத்தை பற்றிய உண்மைகளைக் கேட்க வெறுக்கிறார்கள்.

✍️அவர்களின் வளர்ப்பில் உள்ள சில பிழைகளைத் திருத்த முயல்கிறோம் என்பதற்காக, சில பெற்றோர்கள் ஆசிரியர்களை எல்லாவிதமான வசை சொற்களாலும் பெயர்களாலும் அழைத்து, அச்சுறுத்துவது தொடர்கின்றது.

✍️அவர் என்னென்டு என்ர பிள்ளையை அப்படி சொல்லலாம்...?? படிப்பிக்க விட்டா படிப்பிக்கிற வேலைய பார்க்கிறதுக்கு..?? எங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை பார்ப்பது உங்கள் வேலையா? நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்க மாட்டீர்களா?...

✍️திருப்பவும் சொல்கின்றேன்
பாடங்களை மட்டுமே கற்பிப்பது தான் எங்கள் வேலை என்றால் உண்மையில் அதைப் போன்ற ஒரு சொர்க்கம் உலகத்தில் இல்லை. 

✍️நீங்கள் வீடுகளில் கற்பிக்க வேண்டியவற்றை நீங்களே பிள்ளைகளுக்கு கற்பித்தால் அவர்களை அதற்கேற்ப வழிப்படுத்தி அனுப்பினால் நாங்கள் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டியவற்றோடு மட்டும் நின்று விடுவோம்..!!

ஆனாலும் ஆசிரியம் அப்படி இல்லை என்னும் யதார்த்தத்தை நாம் நன்கு அறிவோம். 

We are not just teachers, we are the mangers of the world's greatest resource : children.

✍️தந்தையாக தாயாக சகோதரனாக சகோதரியாக நண்பனாக ஆசிரியனாக வழிகாட்டுனராக கட்டுப்படுத்துனராக செயற்படும் போது இது உங்கள் வேலையா என்று நீங்கள் கேட்கும் விடயங்கள் எல்லாம் உண்மையில்
**ஆம், இது எங்கள் வேலைதான்!**

✍️நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதை ஆராய வேண்டியதும் தவறுகின்ற போது உங்களை அழைத்து குறித்த பிரச்சனைகளை உங்களுக்கு தெரிவித்து அதே உங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுடனும் கட்டுக்கோப்புடனும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்புடைய பங்குதாரர்கள் இந்த ஆசிரியர்கள் தான்.

✍️அது எங்கள் வேலை தான், ஏனென்றால், உங்களால் தவறாக வளர்க்கப்பட்ட குழந்தைகள் என் குழந்தைகள் உட்பட மற்ற குழந்தைகளையும் வகுப்பறைகளில் மட்டுமல்ல சமூகத்திலும் கெடுத்துவிடுவார்கள்.

✍️அது எங்கள் வேலை தான், ஏனென்றால், நாம் ஏற்கனவே சமூகத்தில் வைத்திருக்கும் ரவுடிகள், விபச்சார கார்கள், போதைக்கு அடிமையானவர்கள், பாலியல் வல்லுறவாளர்கள் போன்று முறையற்ற பிள்ளை வளர்ப்பினால் நீங்கள் மேலும் பலரை உருவாக்கலாம்; அதன் மூலம் எங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தாத பாதுகாப்பற்றதான சூழல் உருவாகலாம் அதனால் அவர்களை கண்டித்து கட்டுக்கோப்புடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்க வேண்டியது எங்கள் வேலை தான்.

✍️அது எங்கள் வேலை தான், ஏனென்றால், நீங்கள் சண்டியர்களை உருவாக்கி, சாதாரண குழந்தைகள் இருக்கும் அதே பாடசாலைக்கு அனுப்புகின்றீர்கள்.

✍️மாணவர்களாக நடிக்கும் கட்டுப்படுத்தப்படாத காவாலிப் பிள்ளைகளிடம் அப்பாவி குழந்தைகளை தொடர்ந்து இழக்க முடியாதல்லவா ஆதலால் அது எங்கள் வேலை தான்,

✍️தந்திரமான ஏமாற்று வித்தைகளையும் பாசாங்குகளையும் கற்றுக்கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளால் எங்கள் சமூகம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது ஆதலால் அது எங்கள் வேலை தான்.

✍️நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து கூடவே மாணவர்களை கட்டுப்பாட்டுடனும் கட்டுக்கோப்புடனும் வழிப்படுத்த வேண்டியது எங்கள் வேலை தான், ஏனென்றால் ஒவ்வொரு திட்டமிட்டு வளர்க்கப்படும் குழந்தையும் மனித குலத்திற்கு கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு சிறப்பு பரிசு.

✍️இன்று நீங்கள் கெடுக்கும் அல்லது புறக்கணிக்கும் அல்லது முறையாக வளர்க்கப்படாத அந்தக் குழந்தை நாளை எல்லோருடைய விதியையும் நிர்ணயிக்கும் தன்மையை தீர்மானிக்கும் வல்லமையுடன் இருக்கக்கூடும் என்பதை யார் அறிவார்?

✍️நாம் அனைவரும் இணைந்து வாழ வேண்டிய சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் அழிவை ஏற்படுத்தும் சண்டாளர்களை நீங்கள் வளர்க்கும்போது, "என்ர பிள்ளையை கண்டிக்க நீங்கள் யார் என்றும் ? நீங்கள் உங்கட வேலையைப் ஒழுங்கா பாருங்கள்" என்று எங்களிடம் சொல்லாதீர்கள்.

✍️இந்த காலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும், ஒவ்வொரு குழந்தையின் வளர்ப்பிலும் ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் பங்குதாரர்கள்.

✍️ஆசிரியராக நான் நினைப்பது ஒன்றே ஒன்று தான். தீமையைக் கண்டோ அல்லது கேட்டோ நாம் அமைதியாக இருந்தால், எதிர்காலம் நம்மை நியாயந்தீர்க்கும்.

✍️உறுதியாக, இறுதியாக நீங்கள் வீடுகளில் பிள்ளைகள் தொடர்பாக பார்க்க வேண்டிய விடயங்களை பார்த்தால் நாங்கள் கற்பிப்பதை தாண்டி வேறொன்றும் பார்க்கத் தேவையில்லை..!!

பார்க்கவும் மாட்டோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive