இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆக.11-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.8-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று கடைசி தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் செப்.10-ம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை நீட்டித்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் டிஆர்பி இணையதளத்தை (www.trb.tn.gov.in) பயன்படுத்தி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்களும், பி.எட் 2-ம் ஆண்டு படிப்பவர்களும் ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு ‘டெட்’ தேர்ச்சி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.







TET Apply money yaruku poguthu ippadi padichavan thalaila manna poduranga.hereafter b.Ed vendam .teaching avolathan. Students life kutchuvara aakurathu Government
ReplyDelete