ஆளுநரால்
திருப்பி அனுப்பப்பட்ட, கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடைக்கால செயலாட்சியர்
நியமித்தல் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் சட்டபேரவையில் ஒரு மனதாக
நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்டமுன் வடிவை 2024 டிச.10-ல் அமைச்சர் பெரிய கருப்பன் கொண்டு வந்தார். இந்த மசோதா பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்தாண்டு ஜூன் 16-ம் தேதி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று அந்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் மீண்டும் தாக்கல் செய்தார். இறுதியில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கூட்டுறவுத் திருத்தச் சட்டம் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...