*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து எல்லா ஆட்சி காலங்களிலும் போராடி வருகிறோம். இப்போதும் 2018ல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் போராட்டக் களத்திற்கு நேரில் இரண்டு முறை வந்து கரம் பற்றி கொடுத்த வாக்கான 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு சம ஊதியம்" என்ற தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற கோரி தான் கடந்த 27- நாட்களாக போராடி வருகிறோம்.
*ஆனால் சில பிரிவினைவாதிகள் ஆசிரியர்களுக்கான நலன்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதால் திட்டமிட்டு மூத்த ஆசிரியர்களை சமூக வலைதளங்களில் வசை பாடுவதும், நாகரிகம் இல்லாமல் பதிவுகளை செய்வதும் அரசையும் விமர்சித்து பதிவுகளையும் செய்து அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள நல்ல இணக்கத்தை திட்டமிட்டு சதி செயல் செய்து முறியடிக்க பார்க்கிறார்கள். அவ்வாறாக செயல்படும் நபர்களுக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
போராடும் எங்களது SSTA இயக்கமானது கோரிக்கை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மட்டுமே அனைத்து இடங்களிலும் முதல்வரோடு இருக்கும் பதாகைகளையும், பதிவுகளையும், கோஷங்களை பதிவிடுகிறோமே தவிர அரசையோ, மாண்புமிகு முதல்வரையோ பிற இயக்க தலைவர்களையோ நாகரிகமற்ற முறையில் விமர்சித்து எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு பதிவும், கோஷங்களையும் எங்களது இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் யாரும் பதிவு செய்வதில்லை. சமூக வலைதளங்களில் எங்கள் இயக்கம் சாராத, பிறர் திட்டமிட்டு அவ்வாறு பதிவு செய்தவர்களை கண்டுபிடித்து இதேபோன்று தொடர்ந்து தவறு செய்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவீர்கள் என சுட்டிக்காட்டி அதை அழிக்க செய்துள்ளோம்.*
*இனிவரும் காலங்களில் எவரேனும் எங்கள் இயக்கத்தின் பெயரையோ படங்களையோ பயன்படுத்தி அரசையோ மாண்புமிகு முதல்வர் அவர்களையோ மாண்புமிகு அமைச்சர் அவர்களையோ இயக்க தலைவர்களையோ விமர்சனம் செய்தால் அவர்கள் மேல் SSTA இயக்கம் சார்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 27-நாட்கள் போராட்ட களத்திலுள்ள கடுமையான சூழ்நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த கட்டுப்பாடு கண்ணியத்தோடு அரசுக்கு கோரிக்கை 311 ஐ நிறைவேற்றக்கோரி மட்டுமே போராட்டம் செய்து வருகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
*சென்ற காலங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களின் போதும் இது போன்ற சிலர் திட்டமிட்ட சதி செயலை செய்திருக்கிறார்கள், என்பதை நினைவுபடுத்துகிறோம். இதனை உணர்ந்து போராடும் ஆசிரியர்களுக்கு நல்ல ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். மேலும் அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கையை புரிந்து மாணவர்களின் கல்வி நலன் இன்னும் இன்னும் பாதிக்கப்படாத வண்ணம் ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நல்ல ஒரு முடிவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம்.
நல்ல ஒரு முடிவு ஏற்படும் பட்சத்தில் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் நன்றியோடு இருப்போம்.
தகவல் பகிர்வு..
SSTA மாநில தலைமை








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...