இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், அரசாணை 243 தொடர்பான திருத்தங்கள், ரூ.5400 தரஊதிய பாதிப்பு களைதல், பி.லிட்., பி.எட். ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத்தடை நீக்கம், பி.காம்., எம்.காம்., பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு தடைநீக்கம், தொகுப்பூதிய காலம் காலமுறைப் பணிக்காலமாக்கி ஆணை வழங்குதல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தோர் ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜேக் பேரமைப்பிற்கு ஏற்பளித்தவாறு விரைந்து நிறைவேற்றக் கேட்டுக்கொண்டோம்.
தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு முன்பாகவோ, மாநாட்டில் அறிவிக்கும் வகையிலோ ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தினோம். பிப்ரவரி 2 முதல் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் 1 வார காலம் தங்கி, கோரிக்கைகளுக்கான ஆணை பெறுவதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...