Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உதவித் தொகை வழங்க முதல்வரின் திறனாய்வுத் தேர்வு: தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது

hindutamil-prod%2F2026-01-29%2Fks3z2wp7%2F102132832025104661KA29SSLCEXAMINKRISHNAGIRI

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற் கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.
 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. முதல் தாள் (கணிதம்) தேர்வு காலை 10-12 மணி வரையும், 2-ம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) தேர்வு மதியம் 2-4 மணி வரையும் நடைபெறும்.

ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், அவர்களது பதிவெண்ணுக்கு உரியது தானா என்பதை ஹால்டிக்கெட் டுடன் ஒப்பிட்டு உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளை குறிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட தேர்வு மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive