
குறள் : 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
A calm mind solves difficult problems.
அமைதியான மனம் கடினமான பிரச்சனைகளையும் தீர்க்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
முதலில் சிறந்த புத்தகங்களை படியுங்கள் இல்லையெனில் அவற்றைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் - ஹென்றி டேவிட் தோரோ
பொது அறிவு :
01.நமது நாட்டின் 2026 குடியரசு தின அணிவகுப்புக்கான கருப்பொருள் என்ன?
02. 2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் எந்த கருப்பொருளை கொண்டு அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது?
English words :
pass down -transfer tradition to the next generation
tormenting -torturing
தமிழ் இலக்கணம்:
ஜனவரி 26
இந்தியக் குடியரசு நாள்
* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்
* 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.
* 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
* அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது
நீதிக்கதை
நல்லதே செய்
ஒரு பெரிய முதலாளியிடம் பல அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்கள் பல வகையிலும் கொடுமைப் படுத்தப்பட்டு வந்தனர். துன்பத்திற்குள்ளான அவர்களில் ஒருவன் முதலாளியிடமிருந்து எப்படியோ தப்பி காட்டிற்குள் ஓடி விட்டான்.
அவன் காட்டில் ஒளிந்து திரிந்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் அருகில் வந்தது. அது மிகுந்த வலியால் துடிப்பதை அடிமை பார்த்தான். அவன் சிறிதும் பயம் இல்லாமல் அதன் காலைத் தூக்கிப் பார்த்தான். அதன் பாதத்தில் ஒரு பெரிய முள் தைத்திருந்ததைப் பார்த்தான். சிங்கத்தின் காலில் தைத்திருந்த முள்ளை மிகவும் சிரமப்பட்டுப் பிடுங்கி எறிந்தான். அதன் காலை தடவிக் கொடுத்தான். சிங்கமானது ஆபத்தில் தனக்கு உதவிய அந்த மனிதனை நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு வலி நீங்கி மகிழ்ச்சியுடன் சென்றது.
காட்டில் அவன் இருப்பதை அறிந்த அந்த அடிமை மனிதனை முதலாளியின் ஆட்கள் பிடித்துச் சென்றனர். அந்தக் காலத்தில் தப்பியோடும் அடிமைகளுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம். அதன்படி ஒரு கூண்டிற்குள் ஒரு சிங்கத்தை அடைத்து அச்சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு வைத்து அந்த அடிமை மனிதனை அக்கூண்டிற்குள் தள்ளிவிட்டு சிங்கத்தை ஏவி விடுவர். அவ்வாறு இந்த அடிமையையும் சிங்கம் இருக்கும் கூண்டிற்குள் தள்ளிவிட்டனர். பசியோடு இருந்த அந்த சிங்கம் அந்த அடிமையை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அருகில் வந்ததும், அந்த மனிதன் தன் காலில் முள் தைத்து அவதிப்பட்டபோது உதவியவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டது. மிகவும் பணிவுடன் அவன் அருகில் வந்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்தது. அடிமை, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசனும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அரசன், அடிமை மனிதனிடம் விபரங்களைக் கேட்டறிந்தான். அடிமை மனிதன் சொன்ன செய்தியைக் கேட்டு அறிந்த அரசன் அடிமையை விடுதலை செய்தான். நன்றியுணர்வு மிக்க சிங்கத்தைக் காட்டில் கொண்டுபோய் விடச் செய்தான்.
நீதி :
நமக்கு நன்மை செய்தவனுக்கு நாம் நன்றி மறவாமல் நடக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...