Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2026




 






திருக்குறள்: 

குறள் 331: 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. 

விளக்க உரை: 

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

பழமொழி :

Learning never goes waste. 

கற்றது ஒரு போதும் வீணாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.நீரின் கொள்ளளவு அடிப்படையில்உலகின் மிகப்பெரிய நீர் தேக்கம் எது?

கரிபா ஏரி-Lake Kariba,
ஜாம்பேசி நதி Zambezi- ரிவேர் ஆப்பிரிக்கா - Africa

02.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை எது?

சூயஸ் கால்வாய் -The Suez Canal

English words :

invincible-unbeatable

generosity-willing to give freely

தமிழ் இலக்கணம்: 

 கட்டடம் மற்றும் கட்டிடம் வேறுபாடு இரண்டுமே கட்டுமானப் பொருளைக் குறித்துப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிறிய நுணுக்கமான வேறுபாடு உள்ளது. கட்டடம் (Building) என்பது ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு அடுக்கான அமைப்பைக் (Structure) குறிக்கிறது. கட்டிடம் (Site/Plot) என்பது கட்டப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மனை அல்லது நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

நீதிக்கதை

 பலமும் பயமும்


சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது. 


சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது. 


நீதி :

பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.

இன்றைய செய்திகள்

29.01.2026

⭐ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் &  சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களை
பொருளாதார ரீதியாக முன்னேற்றும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (TABCEEDCO) ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு
முன்வந்துள்ளது.

⭐ இந்தியாவிலேயே பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

⭐ தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

⭐சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம். ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது.

🏀பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது.

Today's Headlines

⭐ Tamilnadu government has come forward to provide loan assistance of up to Rs. 25 lakhs to the Backward Classes Economic Development Corporation (TABCEEDCO), which aims to economically advance the backward classes, the most backward classes and the scheduled castes.

⭐ The Chief Minister of Tamil Nadu has launched a free vaccination program for girls under the age of 14 in Tamil Nadu to prevent oral cancer.

⭐A government order has been issued in Tamil Nadu reducing the passing marks for the Teacher Eligibility Test by 5%.

⭐Central Government Scheme for ATMs for Small Currency Notes to Address Retail Shortage. * The Central Government is considering setting up hybrid ATMs. Also
The government will prioritise installing these ATMs in places where people congregate.

 SPORTS NEWS 

🏀 Bangladesh team out of World Cup series. * The Scotland team will play in the T20 World Cup due to the Bangladesh team's withdrawal.

🏀All teams are preparing for the T20 World Cup series starting on February 7. In that regard, the Australian team has decided to play a 3-match T20 series with Pakistan.

Covai women ICT_போதிமரம்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive