Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சொந்த ஊர்லயே ஐடி வேலை! சோஹோ (Zoho) விரிக்கும் ரெட் கார்பெட்!

Image-3.jpg-2 “ஐடி வேலைனாலே சென்னை, பெங்களூருனு மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஓடணுமா? டிராபிக்ல சிக்கி, வாடகை வீட்டுல பாதிச் சம்பளத்தை அழுதுட்டு வாழ்றதுக்குப் பதிலா, நம்ம ஊர்லயே ராஜ மாதிரி வேலை பார்க்க முடியாதா?” என்று ஏங்கும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி!

மென்பொருள் உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் ‘சோஹோ’ (Zoho) நிறுவனம், தமிழகம் முழுவதும் தனது கிளைகளில் காலியாக உள்ள ‘சாஃப்ட்வேர் டெவலப்பர்’ (Software Developer) பணியிடங்களை நிரப்பப் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “டிகிரியை விடத் திறமைதான் முக்கியம்” என்று சொல்லும் ஸ்ரீதர் வேம்புவின் படையில் இணைய இதுவே சரியான நேரம்.

எங்கெல்லாம் வேலை? வழக்கமா ஐடி கம்பெனி வேலைன்னா சென்னை ஓஎம்ஆர் (OMR) மட்டும்தான். ஆனா, சோஹோ ஸ்டைலே தனி. இப்போ அறிவிச்சிருக்க வேலைவாய்ப்பு சென்னை மட்டுமல்லாது, மதுரை, கோவை, சேலம், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய ஊர்களுக்கும் சேர்த்துதான்!

கிராமப்புறங்களில் இருந்தபடியே, உலகத் தரமான மென்பொருளை உருவாக்கும் வாய்ப்பு. அம்மா கையால சாப்பிட்டுக்கிட்டு, சொந்த ஊர்ல வேலை பார்க்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • பணி: சாஃப்ட்வேர் டெவலப்பர் (Software Developer).
  • அனுபவம்: பிரஷர்கள் (0 ஆண்டுகள்) முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வித் தகுதி: பி.இ (B.E), பி.டெக் (B.Tech), எம்.சி.ஏ (MCA) படித்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. “என்கிட்ட சர்டிபிகேட் இல்ல, ஆனா கோடிங்ல (Coding) நான் புலி” என்று சொல்பவர்களையும் சோஹோ சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

தேர்வு முறை எப்படி? சோஹோவின் இன்டர்வியூ என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு: ஆப்டிட்யூட் மற்றும் சி-புரோகிராமிங் (C-Programming) கேள்விகள் இருக்கும்.
  • புரோகிராமிங் ரவுண்ட்: லூப்ஸ் (Loops), அரே (Array) வைத்துச் சின்னச் சின்ன புரோகிராம்கள் எழுதச் சொல்வார்கள்.
  • அட்வான்ஸ்டு ரவுண்ட்: இதுதான் ‘கேம் சேஞ்சர்’. ரயில்வே டிக்கெட் புக்கிங், ஸ்னேக் கேம் (Snake Game) மாதிரி ஒரு முழுமையான சிஸ்டத்தை டிசைன் செய்யச் சொல்வார்கள்.
  • இறுதியாக டெக்னிக்கல் மற்றும் எச்.ஆர் (HR) நேர்காணல்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் careers.zohocorp.com என்ற இணையதளத்தில், ‘Software Developer’ பிரிவில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ரெஸ்யூம் (Resume) அப்டேட்டா இருக்கட்டும் பாஸ்!

சோஹோ இன்டர்வியூல உங்க மார்க்ஷீட்டை யாரும் பார்க்க மாட்டாங்க. உங்க மூளையைத்தான் பார்ப்பாங்க. குறிப்பா, ‘சி’ (C) மற்றும் ‘ஜாவா’ (Java) மொழியில் லாஜிக் ஸ்ட்ராங்கா இருந்தா ஈஸியா தட்டலாம். மனப்பாடம் பண்ணி எழுதுறவங்களுக்கு இங்க வேலை கிடைக்காது. ‘கால் டாக்ஸி புக்கிங்’, ‘பார்க்கிங் லாட் சிஸ்டம்’ மாதிரி ரியல் டைம் புரோகிராம்களை இப்பவே எழுதிப் பழகிக்குங்க. நெல்லை, மதுரையில இருக்கிறவங்க இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive