தமிழ்நாடு அமைச்சுப் உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து பணி இளநிலை தட்டச்சர் நிலை-3. ஆகியோர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் தாயர் செய்யப்பட்டது மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விவரங்கள் தெரிவித்தல் - சார்ந்து
2025-2026ض ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV ற்கான (நேர்காணல் அல்லாத பதவி) இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய நியமனம் வழங்குவதற்கு முன்னர் ஏற்கனவே பணியில் உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவியில் பணிபுரிவோரிடமிருந்து உடல்நிலை. குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவ்விண்ணப்பங்கள் தொகுக்கப்பட்டு பார்வை 6ல் காணும் செயல்முறைகளுடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு விடுபட்ட பணியாளர்கள் விவரம் மற்றும் பட்டியலிலுள்ள பணியாளர்களின் விவரங்களில் திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய விவரங்களை அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, திருத்தம், மற்றும் நீக்கம் செய்யப்படவேண்டிய விவரங்களுடன் விடுபட்ட பணியாளர்களின் விவரங்களும் பார்வை 7ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து கருத்துருக்கள் (இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3) பெறப்பட்டது.
மேற்கண்டவாறு மாறுதல் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாவட்டத்திற்குள் மாறுதல் (Within District) கோரியுள்ளவர்களுக்கு 29.01.2026 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் நிலையிலேயே பார்வை 2ல் காணும் அரசாணை, பார்வை 3 மற்றும் பார்வை 4ல் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...