Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.26

மகாத்மா காந்தி 






திருக்குறள்: 

குறள் 373: 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும். 

விளக்க உரை: 

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

பழமொழி :

Self control is the strongest power. 

தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி : 

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு : 

1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?

 ஷெர்ஷா சூரி- Sher Shah Suri

02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?

திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan

English words :

overwrought-very worried

 inception-beginning of something

தமிழ் இலக்கணம்: 

 ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும்  புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில்  முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள் 
ஆ –ஆக்கள்

ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்  .   சத்தியாக்கிரகம்  என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. 

நீதிக்கதை

வெட்டுக்கிளியும் ஆந்தையும்


ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது. 


ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது. 


நீதி :

பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது. 

இன்றைய செய்திகள்

30.01.2026

⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.

Today's Headlines

⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.

 ⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.

⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.

 SPORTS NEWS

🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne. 

🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.

Covai women ICT_போதிமரம்

  





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive