வீடில்லா நாய்கள் குறித்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்த பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க உத்தரவு!
பொருள்:
மாநகராட்சி நிர்வாகம் கல்வி - கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகள் வீடில்லா நாய்களை முறையாக பிடித்து அவைகளுக்குரிய தங்குமிடத்திற்கு கொண்டு சென்று பராமரித்தல் -பள்ளிகளில் சுற்றி திரிகின்ற வீடில்லா நாய்கள் குறித்த தகவல்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்துதல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் -பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodel Officer) ஒருவரை நியமித்தல் சார்பு.
பார்வை:
கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 22.12.2025. /2025/எம்இ2 நாள்.
பார்வையில் காண் கடிதத்தின்படி, மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படும் அறிவிப்பின்படி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகள். கல்லூரி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள். விளையாட்டு தளங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், சுற்றுலா தளங்கள். வழிபாட்டு தளங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்கள் போன்ற இடங்களில் உள்ள வீடில்லா நாய்களை முறையாக பிடித்து அவைகளுக்குரிய தங்குமிடத்திற்கு (Dogs Shelter) கொண்டு சென்று பராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் ஏற்படுத்தி வீடில்லா நாய்கள் உள்ளே புகாதவாறு பாதுகாத்தல். சரியான முறையில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுத்துதலை உறுதி செய்தல், மேலும் சுற்றித் திரிகின்ற வீடில்லா நாய்கள் குறித்த தகவல்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்துதல். இது குறித்து பள்ளி /கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மேற்படி நிறுவனத்திற்கு ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodel Officer) ஒருவரை நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து அவ்வப்போது கோரப்படும் தகவல்களை வழங்கும் பொருட்டு பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமித்து அதன் விபரத்தினை இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 2 தினங்களுக்குள் இணைப்பில் கண்டுள்ள தகவல்களை achocoimbatore@gmail.com என்ற மின்னஞ்சல் (e-mail) மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகலினை மாநகராட்சி கல்விப் பிரிவில் (Hard Copy) நேரில் சேர்ப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பள்ளித் தலைமையாசிரியர்களே தங்கள் பள்ளியில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமித்து அந்த நபர் 29.01.2026 அன்று மாலை 3.00 மணிக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...