Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்க பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

hindutamil-prod%2F2026-01-26%2Ft1gn9hkk%2F1315088

 முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்​கம் பயிற்​சிகள் நீட்​டிக்கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் மற்​றும் தொடக்​கக்கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) பள்​ளிக்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை அறி​விப்​பின்​படி, அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்​புவரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடத்​திறன் மற்​றும் கணிதத்​திறன் ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கப் பயிற்சி கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து பள்​ளி​களி​லும் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

ஆசிரியர்​களின் தொடர் முயற்​சி​யால் தேர்​வில் 68 சதவீத மாணவர்​கள் அடிப்​படை கற்​றல் விளைவு​களில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இன்​னும் தேர்ச்சி பெறாத மாணவர்​களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடு​தல் கால அவ​காசம் தேவைப்​படு​வ​தால் முழு ஆண்​டுத் தேர்வு வரை திறன்பயிற்சி நீட்​டிக்​கப்​படு​கிறது. இதற்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி அனைத்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாணவர்​களும் திறன் மாதாந்​திர மதிப்​பீட்​டில் பங்​குபெற வேண்​டும். முழு ஆண்​டுத் தேர்​வின்​போது தமிழ், ஆங்​கிலம்,கணித பாடங்​களுக்கு திறன் பயிற்சி புத்​தகம் சார்ந்த தனி வினாத்​தாள்​ வழங்​கப்படும். அதே​போல், அறி​வியல் மற்​றும் சமூக அறி​வியல் பாடத் தேர்​வு​களுக்​கான கேள்வி​கள், முந்தைய வகுப்​பு​களில் இருந்து எளிமை​யான​தாக இருக்​கும்.

மேலும், திறன் பயிற்சி பெற்ற 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்​களுக்கு வகுப்பு நிலை பாடங்​களுக்​குத் தயா​ராகும் வகை​யில்,அடுத்த கல்​வி​யாண்​டின் முதல் மாதம் பிரிட்ஜ் கோர்​ஸ் நடத்​தப்படும். இதைப் பின்​பற்றி அனைத்து பள்ளி தலை​மை​யாசிரியர்​களும் செயல்பட வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive