![]() | |
|
A contended mind is a continual feet.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.
2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :
நீங்கள் ஒருவருக்கு நன்மை செய்தால், அது உங்களுக்கே நன்மை செய்தது போன்றது. ஒருவருக்கு தீமை செய்தால் , அது உங்களுக்கே தீமையாகும் - அல்குர்ஆன்
பொது அறிவு :
01.விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?
02.காந்தி அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்திய அமைப்பு எது?
English words :
Debate – Discussion between candidates
Secret Ballot – Voting privately
தமிழ் இலக்கணம்:
அறிவோம் தமிழ்
இல்லை, அல்ல, அன்று
இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும் அப்படி அல்ல. இவைகளை நாம் பயன்படுத்தும் இடம் வேறு படும்.
இல்லை என்பது ஒரு பொருள் அல்லது நபர் இல்லாததைக் குறிக்கும்.
1. என்னிடம் பணம் இல்லை
2. என் தகப்பனார் இங்கு இல்லை
அல்ல என்பது "ஒன்று வேறு ஒன்றாக இல்லை என்று சொல்ல"
1. இது என் புத்தகம் அல்ல
அன்று என்பதும் மேலே குறிப்பிட்ட அதே பொருள் தான் தரும் ஆனால் இது உயர்ந்த இலக்கிய நடை ஆக பயன்படுத்தப் படும்
1. இது உண்மை அன்று
2. இது நன்மை அன்று
அறிவியல் களஞ்சியம் :
ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்திலும், அதற்கு மூன்று இதயங்களும் உள்ளன.
மார்ச் 26
நீதிக்கதை
நரி சொன்னப் பொய்
ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.
சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.
சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.
நீதி :
புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...